கணக்கையும் தரவையும் நீக்குதல்
உங்கள் myStaze கணக்கையும் அதனுடன் இணைந்த தனிப்பட்ட தரவையும் நீக்குவது எப்படி என்பது இந்தப் பக்கத்தில் இருக்கிறது. உலாவியிலோ ஆப்பிலோ, நீக்குவதற்குக் கட்டணம் இல்லை.
இங்கேயே நீக்குங்கள்
உள்நுழைந்து கீழே உறுதிப்படுத்துங்கள். நீக்கம் அப்போதே நடக்கும்.
உள்நுழையாமல்
myStaze இல் நீங்கள் பயன்படுத்தும் முகவரியிலிருந்து, "Data Deletion Request" என்ற தலைப்பில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். 30 நாட்களுக்குள் நீக்கிவிடுவோம்.
எது போகும், எது இருக்கும்
உங்கள் உள்நுழைவு, மின்னஞ்சல் முகவரி, வாங்கிய டிக்கெட்டுகளுடனான இணைப்பு, அரட்டைச் செய்திகள் ஆகியவற்றை நீக்குகிறோம்.
வாங்கியதற்கான ஆவணங்களைக் கணக்கியல் சட்டம் சொல்லும் காலம் வரை வைத்திருப்போம், அதிகபட்சம் ஆறு ஆண்டுகள். அவை எந்தக் கணக்குடனும் இணைந்திருக்காது.
நீக்கம் அப்போதே நடக்கும். காப்புப் பிரதிகளில் மிச்சமிருப்பது 30 நாட்களுக்குள் அழிந்துவிடும்.
myStaze இல் நேரலைகளை நீங்களே நடத்தினால், எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். கடைசி பணம் தீர்ந்த பிறகு ஏற்பாட்டாளர் கணக்கை மூடிவிடுவோம்.